Tuesday, 24 November 2009
The Terminal -2004 Must watch movie
டாம் ஹன்க்ஸ் நடிப்பில் இன்னொரு மயில் கல். விக்டர் நவோர்ஸ்கி ( டாம் ஹன்க்ஸ்) நியூ யார்க் ஜான் ஏப் கென்னெடி விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். இம்மிகேரஷேன் இடத்தில அவரது பாஸ் போர்ட் செல்லாது என சொல்லிவிடுகிறார்கள் காரணம் அவரது நாடான க்ரகொஷேயவில் போராளிகள் நாட்டில் சண்டை போட்டு ஆட்சியை கலைக்கின்றனர் . விமான நிலையத்தின் தலைமை அதிகாரி டிக்சன் விக்டரை நியூ யார்க் நகருக்குள் அனுமதிக்க முடியாது என்றும் போர் நடப்பதால் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும் கூறிவிடுகிறார். ஆங்கிலம் சரியாக தெரியாத விக்டருக்கு முதலில் சரியாக புரியாவிட்டாலும் டிவி ஐ பார்த்து தன நாட்டில் நடக்கும் உள்ளநாட்டு கலவரம் புரிகிறது .
ஒன்பது மாதம் ஜான் ஏப் கென்னெடி விமான நிலையத்தின் டெர்மினலில் வாழ்கிறான் விக்டர். அவன் அங்கு இருக்கும் சமயத்தில்
முதலில் உணவுக்கு கஷ்ட படுகிறான். பின்னர் அவனுக்கு விமான நிலையத்தினுள் நல்ல நண்பர்கள் கிடைகின்றனர் . அதில் ஒரு நண்பனின் காதலுக்கு உதவுகிறான் விக்டர். அமேலியா என்னும் விமான பணிப்பெண்ணின் நட்பு கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் தன் தந்தைக்கு கொடுத்த சத்தியத்துக்காக தான் விக்டர் வந்துருகிறான் என்பது அமேலியாவுக்கு தெரிகிறது.இந்த நேரத்தில் க்ரகொஷேயவில் போர் முடிவுக்கு வருகிறது. விமான நிலையத்தின் தலைமை அதிகாரி டிக்சன் விக்டரை திருப்பி அனுப்ப சதி செய்கிறான். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை விக்டர் காபற்றுகிறனா என்பது தான் மீதி கதை. ஸ்டீவென் `ஸ்பெஇல்பெர்க இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்க பட்ட படமாம். விக்டராக டாம் ஹன்க்ஸ்யும் அமேலியாக காதரின் சேட ஜோன்ஸ் நன்றாகவே நடிதிருகிரர்கள். மொத்தத்தில் பார்க்க வேண்டிய படம்..
கிறுக்கல்கள் தொடரும் .............
Labels:
catharine zeta jones,
review,
steven spielberg,
The Terminal,
tom hanks
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment