வணக்கம் நண்பர்களே !! இது என் முதல் பதிவு .. வெகு நாட்கள் ஆகவே ஒரு இணைய தளத்தில் ஒரு பதிவு வெளி இட வேண்டும் என்பது எனது ஆசை. என்ன எழுதலாம் என மிகவும் யோசித்து நேரத்தை வீண் ஆனது தான் மிச்சம். நேற்று முன் தினம் இரவு நான் கேட்ட மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் ஒலி நாடாவை பற்றி எழுதலாம் என முடிவுக்கு வந்தேன்.
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகத்தை நான் சில ஆண்டுகள் முன்னர் நான் வாசித்து இருகிரேன். சுவாமி சுகபோதானந்தாவின் கருத்துகளும் அவர் கூறும் உதாரண கதைகளும் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஒரு மனிதன் எந்த சூழ்நிலையில் இந்த புத்தகத்தை அல்லது ஒலி புத்தகத்தை கேட்கிறானோ அதற்கு ஏத்தவாறு அவன் மனதில் புது எண்ணம் பிறக்கும். ஒரு சராசரி மனிதன் தன் வாழ்க்கையில் செய்யும் அணைத்து தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டி இருப்பர். அதில் ஒன்று "Procrastination" (எதையும் தள்ளி போடும் குணம்) எளிதில் சொல்ல வேண்டும் என்றால் சோம்பேரித்தனம். காலை பெட் ஐ விட்டு ஏழும் நேரம் முதல் ஆபீஸ் வேலை சம்பந்தமாக இமெயில் அனுப்புவது வரை எல்லா விஷயத்தையும் நாம் தள்ளி போடுகிறோம். காலை தூக்கம் கலைந்த பிறகும் இன்னும் ஒரு பத்து நிமிடம் தூங்கலாம் என பெட் இல் புரளும் சாதாரண ஆள் தான் நானும். காரணம் இதில் எதோ சந்தோசம். ஆனால் டெய்லி ஆபீசுக்கு ஒரு மணிநேரம் லேட் ஆகிவிடுகிறது. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகத்தில் இதை பற்றி அழகாக சொல்லிருக்கிறார் சுவாமி சுகபோதானந்தா.. அவர் கூறும் ஐடியா சிம்பிள் தான்.. சந்தோஷத்தை ஷிபிட் செய்யுங்கள்..தூக்கத்தை விட ஆபீசில் வேலை செய்வது தான் சந்தோசம் என்ன நாம் எண்ணத்தை மாற்றி பார்க்க சொல்லிகிறார். ஆபீஸ் வேலை தான் தூக்கத்தை விட முக்கியம் அல்லது வீட்டை சுத்தம் செய்வது தான் சந்தோசம் என நாம் சந்தோஷத்தை ஷிபிட் செய்து பார்க்க சொல்கிறார். நான் ஆபீசுக்கு நேரத்துக்கு வந்து இன்றோடு இரண்டவது நாள்...
கிறுக்கல்கள் தொடரும்...
பதிவுலகம் உங்களை வருக.. வருகவென வரவேற்கிறது.. வாழ்த்துகக்ள். வேர்ட் வெரிபிகேஷனை தூக்கிவிடுங்கள்
ReplyDeletecommand settings->word verifications துக்கிடுங்க ப்ளாக்கர் செட்டிங்ஸ் போய்...
ReplyDeleteவருக வருக :-)உங்கள் முதல் நண்பன்..
என்ன தீணினாலும் சும்மா அடிச்சு ஆடுங்க.. :-)
சாரிங்க..
ReplyDeleteதோணினாலும் அது... :-)
நன்றி நண்பர்களே !! உங்களை போன்ற ஜம்பாவாங்கள் இருக்கும் பொது பாத்து தன பதிவு செய்ய வேண்டும்.
ReplyDeleteகேபிள் சங்கர் தங்கள் தந்தை காலமானதாக படித்தேன். எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்!!