இன்று பதிவுலதில் ஒரு சுற்று வந்தால் நாம் காண்பதில் 70 சதவீதம் பதிவுகள் சினிமா திரை விமர்சனம் மீதம் இருக்கும் 30 சதவீதம் அரசியல், நாட்டுநடப்பு, சமையல் அன்றாட நிகழ்வுகள் பற்றியவை.சிலர் பதிவுலகத்தை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்கின்றனர். சிலர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்கின்றனர். உண்மையில் சிலர் அவர்கள் சொல்லும் கருத்துகளால் ஒரு மாறுதல் பிறகுமா என்று ஒரு முயற்சி செய்கின்றனர் . நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு கேள்வி? .. பதிவுலகத்தால் சமுகத்தில் மாறுதல் ஏற்படுத்த முடியுமா?
இன்று பதிவுகளை வந்து படிக்கும் அதிகமானோர் மென்பொருள் சம்பந்தமானோர் நடுத்தர குடுமத்தில் இருந்து வந்தோர் பின்னர் வெளி நாட்டில் வாழும் நாம் மக்கள். பொதுவாக நம் மக்களிடம் ஒரு கெட்ட பழக்கம். எவ்வளவு முக்கியமான செய்தியாக இருந்தாலும் செரி தனக்கு அதனால் பாதிப்பு இல்லையென்றல் "ஆப்படியா" என்று சாதரணமாக கேட்டுவிட்டு அவன் வேலையை செய்ய தொடங்கிவிடுவான். இப்படி இருக்கும் போது பதிவுலகத்தால் அரசியலில் ஒரு மாறுதல், மக்கள் எண்ணதில் ஒரு மாறுதல்,அரசாங்க அமைப்பில் ஒரு மாறுதலை கொண்டுவர முடியுமா?
உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகின்றன!!!!!!!!!!
கிறுக்கல்கள் தொடரும் ...........
மாறுதல்கள் வருகிறதோ இல்லையோ, பதிவுலக கருத்துக்கள் தன் தாக்கத்தை உணர வைத்துள்ளது. வரும் காலங்களில்
ReplyDeleteஇது இன்னமுன் அதிகமாகும். அணைத்து பிரிவினரும் பதிவுலக கருத்துக்களை கவனிக்க தொடங்கி யுள்ளனர். இதுவே நல்ல ஆரம்பம் தான்.
பொழுதுபோக்காக ஆரம்பிப்பது....சிந்தனையுடன் செயலாக்கவும் பெரும் அதற்க்கு சில காலங்கள் ஆகும்...அதுவரை காத்திருப்போம்.
ReplyDeleteசீரிய கருத்துக்கள் கொஞ்சம் கொஞச்மாய்த்தான் வரும். ஆனால் நிச்சயம் வரும்.
ReplyDeleteகேபிள் சங்கர்