Saturday, 4 September 2010
நானே மறந்துடேன் உங்களுக்கு ஞாபகம் இருக்கா ??????
இன்று ஏனோ தூக்கம் வரவில்லை...போர் அடிக்கின்றது ரிசல்ட் youtube பக்கம் போனேன். எதோ பழைய ஞாபகம் நம்மா தொலை தொடர்பு மினிஸ்டர் ராஜா பத்தி ஒரு ஊழல் இருந்துச்சேன்னு ..அப்போ தான் அவரு மினிஸ்டர் பதவிக்க ஒரு அரசியல் புரோக்கர் நீரா கிட்ட பேசின ஆடியோவ கேட்டேன். பாவம் ஆளு எதோ பரிட்சை ரேசுல்ட ஹெட்மாஸ்டர் கிட்ட கேட்கிற மாதிரி பயந்து கேட்கிறாரு.
கேட்கனுமா??
http://www.youtube.com/watch?v=6qXnxSxVaR4&feature=related
நல்லா இருந்துச்சா?
இப்பிடி மட்டினதுக்கும் அப்புறமும் அவரு இன்னும் மினிஸ்டர் .. எப்படி ?
ஏன்னா அவரு மினிஸ்டர் ஆ இருக்குறது நம்ம இந்தியால ...
ஏற்கனவே அவரு 2G spectrum ஊழல மாட்டினாரு..ஏவளவோ கோடி அடிசுடங்கனு ஊரு குள்ள ஒரு டாக் ..
குயொமுயோ ன்னு ஒரு 10 நாள் எதிர் கட்சி கத்துனாங்க அப்புறம் ப்ரீஅ விட்டுட்டாங்க.. நம்ம மக்களும் ஒரு ஒரு மாசம் நியூஸ் பாலோவ் பண்ணுனாங்க அப்புறம் சன் மியூசிக் ல பாட்டு நல்லா இருக்குன்னு அதை பாலோவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...
நமக்கு எதுக்கு இதுல்லாம் .. நான் தூங்க போறேன்..
என்னமோ மனசுக்குள்ள தெரிஞ்சே ஏமாறுரோம்னு ஒரு வலி ..
கிறுக்கல்கள் தொடரும்..
Tuesday, 31 August 2010
பதிவுலகத்தால் ஒரு மாறுதல் பிறக்குமா?
இன்று பதிவுலதில் ஒரு சுற்று வந்தால் நாம் காண்பதில் 70 சதவீதம் பதிவுகள் சினிமா திரை விமர்சனம் மீதம் இருக்கும் 30 சதவீதம் அரசியல், நாட்டுநடப்பு, சமையல் அன்றாட நிகழ்வுகள் பற்றியவை.சிலர் பதிவுலகத்தை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்கின்றனர். சிலர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்கின்றனர். உண்மையில் சிலர் அவர்கள் சொல்லும் கருத்துகளால் ஒரு மாறுதல் பிறகுமா என்று ஒரு முயற்சி செய்கின்றனர் . நீண்ட நாட்களாக என் மனதில் ஒரு கேள்வி? .. பதிவுலகத்தால் சமுகத்தில் மாறுதல் ஏற்படுத்த முடியுமா?
இன்று பதிவுகளை வந்து படிக்கும் அதிகமானோர் மென்பொருள் சம்பந்தமானோர் நடுத்தர குடுமத்தில் இருந்து வந்தோர் பின்னர் வெளி நாட்டில் வாழும் நாம் மக்கள். பொதுவாக நம் மக்களிடம் ஒரு கெட்ட பழக்கம். எவ்வளவு முக்கியமான செய்தியாக இருந்தாலும் செரி தனக்கு அதனால் பாதிப்பு இல்லையென்றல் "ஆப்படியா" என்று சாதரணமாக கேட்டுவிட்டு அவன் வேலையை செய்ய தொடங்கிவிடுவான். இப்படி இருக்கும் போது பதிவுலகத்தால் அரசியலில் ஒரு மாறுதல், மக்கள் எண்ணதில் ஒரு மாறுதல்,அரசாங்க அமைப்பில் ஒரு மாறுதலை கொண்டுவர முடியுமா?
உங்கள் கருத்துகள் வரவேற்கபடுகின்றன!!!!!!!!!!
கிறுக்கல்கள் தொடரும் ...........